--- --:--:-- --

ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீடிப்பா? ஆகஸ்ட் 1 முதல் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்…! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

675763453

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை மறுதினம் முடிவடைய உள்ள நிலையில் மேலும் நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இ பாஸ் பெற வேண்டும்

அதன்படி யோகா, ஜிம் போன்ற பயிற்சி மையங்களை ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் இரவு நேரங்களில் நடமாட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தனிநபர் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு இ பாஸ் பெற வேண்டும் என்பதும் விலக்கிக் கொள்ளப்படுகிறது என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

தடை

பள்ளி, கல்லூரிகள் திறக்க ஆகஸ்ட் 31-ந் தேதி வரை தடை தொடர்கிறது . பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடையும் தொடர்கிறது .திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

இதனால் ஊரடங்கு ஆகஸ்ட் 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது.

 

Subscription

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon