தமிழகத்தில் ஊரடங்கு குறித்து இன்று முக்கிய ஆலோசனை..!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கடந்த ஒன்றாம் தேதி அமல்படுத்தப்பட்ட ஆறாம் கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கொரொனா நோய் பரவலை கருத்தில் கொண்டு மாவட்ட அளவிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் கிராம கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா? கட்டுப்பாடுகள் தளர்த்தலாமா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காணொளி மூலம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளதால் அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட அளவிலான பேருந்து சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடவடிக்கைகள் குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் நாளை முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.






