பெங்களூரில் திடீரென சரிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்..!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கட்டப்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரை மட்டமானது. நகர் பகுதியில் கட்டப்பட்டு வந்த அந்த கட்டிடத்தின் பக்க வாட்டில் மணல் முழுவதும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு அந்த கட்டிடமானது நொடிப்பொழுதில் மொத்தமாக சரிந்து பலத்த சத்தத்துடன் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது. விபத்திற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில் அதிர்ஷ்டவசமாக கட்டுமான பணியாளர்கள் யாரும் உள்ளே இல்லாததால் எந்தவித உயிரிழப்புகளும் இல்லை என கூறப்படுகிறது.






