நடிகையை பலாத்காரம் செய்யப்போவதாக வீடியோவில் மிரட்டல் விடுத்த நபர்..!
தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகையை பலாத்காரம் செய்யப் போவதாக வீடியோவில் மிரட்டல் விடுத்த குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த 26 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சுப மிஸ்ரா என்பவர் அக்ரிமா ஜோஷ்வா என்ற நடிகையின் மீது பாலியல் அவதூறு கூறுவது போலவும் அவரை பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டுவது போலவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவை வைரலாகி சமூக ஊடகங்களில் பரவியது.
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா ஷர்மா உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டதை அடுத்து போலீசார் சுப மிஸ்ரா என்பவரை கைது செய்தனர். இதனிடையே தமது வீடியோவை நீக்கி விட்ட சுப மிஸ்ரா அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.







