--- --:--:-- --

ஒரே மேடையில், காதலித்த பெண்ணையும், பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணையும் மணந்த இளைஞர்..!

8

மத்திய பிரதேசத்தில் ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ஊர் பஞ்சாயத்தை ஏற்று காதலித்தவரையும் , நிச்சயம் செய்த பெண்ணையும் கரம் பிடித்ததால் புதுமாப்பிள்ளை சிறை கம்பிகளை எண்ணுகிறார்.

 

மத்திய பிரதேச மாநிலம் பெத்துள் நகரை சேர்ந்த சந்திப் என்பவர்தான் சிறைக்கு சென்றவர். அவர் போபால் நகரில் கல்லூரியில் படிக்கும்போது ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் சந்திப்பின் பெற்றோர் வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்தனர். நிச்சயதார்த்தத்தில் காதலியும் கலந்துகொண்டார்.

 

திருமண ஏற்பாடுகள் தொடங்கிய நிலையில் காதலியின் குடும்பத்தாருக்கு விஷயம் தெரிந்ததும் உடனடியாக காதலின் ஊருக்கு சென்றவர்கள் அவரது பெற்றோரிடம் முறையிட்டு வாக்குவாதம் செய்தனர். ஊர் பஞ்சாயத்துக்கு விஷயம் எட்டியதும் 3 தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர்.

 

அப்போது 2 பெண்கள் சந்திப்பில் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தனர். பஞ்சாயத்து உத்தரவுப்படி தான் காதலித்த பெண்ணையும், பெற்றோர் நிச்சயம் செய்த பெண்ணையும் ஒரே மேடையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

 

திருமண நிகழ்ச்சியில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர். ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்வது இந்துமத சட்டத்திற்கு எதிரானது என்பதால் இரண்டு தாலிகட்டிய சந்திப்பை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon