--- --:--:-- --

கொரொனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை அப்புறப்படுத்தாமல் சிகிச்சை அளிக்கும் அறையில் வைத்ததாக குற்றச்சாட்டு..!

8

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அப்புறப்படுத்தாமல் இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கும் அறையில் வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

 

அதில் பத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் உள்ளனர். இரண்டு நாட்கள் ஆகியும் உடலை அப்புறப்படுத்தாதனால் அறையில் இருக்கும் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

 

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவசரஅவசரமாக உடல்களை அப்புறப்படுத்தியது. இறந்தவர்களின் உறவினர்கள் யாரும் வராததால் உடலை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon