--- --:--:-- --

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!

7

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

கீரனூர், அரக்கோணத்தில் தலா 3 சென்டி மீட்டரும், மீனம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் தலா 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை சராசரியை விட 39 சதவீதம் அதிகமாக பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை, திருவாலங்காடு பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. ஒரே இரவில் பத்து சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது.

 

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருத்தணியில் 9.6 சென்டி மீட்டரும், பள்ளிப்பட்டு 9.4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரியில் நேற்று இரவு 7 மணிக்கு துவங்கிய மழை இடி மின்னலுடன் காலை வரை நீடித்துள்ளது. பின்னர் சாரல் மழையாக தொடர்ந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon