மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்? திருப்பூரை அதிர வைக்கும் மாதுவின் மன்மத லீலை! வீடியோ எடுத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை!!
காதலிப்பது போல் நடித்து இளம்பெண்ணை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து, உல்லாசம் அனுபவித்த பனியன் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளான்; திருப்பூரை பரபரப்புக்குள்ளாக்கி இந்த விவகாரத்தில் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பலரை பாலியல் வன்கொடுமை செய்து, அதிய வீடியோ பதிவு செய்து மிரட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசை வார்த்தைகளை கூறி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்வது, அதை ரகசியமாக படம் எடுத்து, அதை காண்பித்தே பலமுறை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் துணிச்சலாக போலீசாரிடம் புகார் அளிக்கப் போய் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அரசியல் பின்புலம் உள்ள இளைஞர்கள் பொள்ளாச்சியில் நடத்திய இந்த கொடூரம், இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ் (28), வசந்தகுமார் (24), திருநாவுக்கரசு (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சியில் அரங்கேறியது போன்ற சம்பவம், பனியன் நகரான திருப்பூரிலும் நடந்துள்ளது. வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த நபர், திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடுமையை செய்து தற்போது கைதாகி இருக்கும் காமுகனின் பெயர், மாது (வயது 41). ஈரோடு மாவட்டம் சென்னிமலைதான் இவனது சொந்த ஊர். வயிற்றுப்பிழைப்புக்காக சில வருடங்களுக்கு முன்பு திருப்பூர் வந்துள்ளான். திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் 6 வயது பெண் குழந்தையுடம் வசித்து வந்தான்.
தனக்கு பெண் குழந்தை இருக்கிறது என்பதை மறந்து, புத்தி பேதலித்த மாது, மற்ற பெண்களை எல்லாம் காமக்கண்ணோட்டத்தில் பார்த்து வந்தான். தான் குடியிருக்கும் எம்.எஸ். நகர் பகுதியில் தனியார் பனியன் நிறுவனத்தில் மாது சூப்பர்வைசராக பணியாற்றி வந்து கொண்டே, பனியன் நிறுவன பெண்கள் சிலரையும் சூப்பர்வைஸிங்க் செய்து, ‘ரூட்’ போட்டு பார்த்துள்ளான்.
அதாவது, காதலிப்பதாக பெண்களிடம் ஆசை வார்த்தை கூறுவது; தனது வலையில் சிக்குபவரை ஆசை தீர அனுபவிப்பது என்பது அவனது திட்டமாகும். அந்த வகையில் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த 24 வயது பெண், இவனது வலையில் சிக்கினார். காதலிப்பது போல் நாடகமாடி அந்த பெண் பலமுறை தனியாக அழைத்துச் சென்று உல்லாசத்தை மாது அனுபவித்து வந்துள்ளான்.
போதாதக்குறைக்கு அந்த பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ படம் எடுத்து வைத்துக் கொண்ட மாது, அதைக்காட்டி மிரட்டியே பலமுறை அனுபவித்து வந்துள்ளான. இந்த சங்கடங்களை வெளியே சொல்ல அச்சப்பட்டு அந்த பெண் உள்ளுக்குள் குமுறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில், இந்த விவகாரம் அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது.
இதற்கிடையே, கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், மாதுவின் பாலியல் தொல்லையில் இருந்து, அந்த பெண் தற்காலிகமாக தப்பினார். ஆனால், சொந்த ஊரான சென்னிமலைக்கு குடும்பத்துடன் சென்று விட்டாலும், மாதுவின் டார்ச்சர் தாங்கமுடியவில்லை. அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்தான். எனவே, அந்த பெண்ணுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர்.

இந்த தகவல் தெரியவந்ததும், சென்னிமலையில் இருந்த மாது ஆவேசமடைந்தான். இனி தன்னால் அந்த பெண்ணை அனுபவிக்க முடியாமல் போய்விடுமோ என்று ஆத்திரம் கொண்டான். உடனடியாக அவனது குறுக்கு புத்தி வேலைச் செய்யத் தொடங்கியது. நைசாகப் பேசி, மாப்பிள்ளை வீட்டார் பற்றிய விவரம் கேட்டு, அவர்களது போன் நெம்பரை வாங்கிக் கொண்ட மாது, அந்த பெண்ணின் ஆபாசப் படங்களை அவர்களுக்கு அனுப்பி வைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தான்.
இதனால், திருமணமும் இரண்டும் கெட்டான் நிலைக்கு போனது. அப்படியும் ஆத்திரம் அடங்காத மாது, உச்சகட்டமாக அந்த பெண்ணின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து, அவமானப்படுத்தி இருக்கிறான். இதையறிந்து அந்த பெண் துடித்துப்போனார்; வாழ்க்கை இப்படி நாசமாகிவிட்டதே என்று கதறியழுதார்; கூடா நட்பு கேடாகப் போய்விட்டது. இனியும் பெண்கள் யாரும் என்னை போல் பாதிக்கக்கூடாது என்று முடிவு செய்தார்.
எனவே, அந்த காமக்கொடூரனை இனியும் விட்டு வைக்கக்கூடாது என்று முடிவெடுத்த அந்த பெண், மாதுவின் மன்மத லீலைகளை திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகாராக கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், மாதுவை கைது செய்து வீடியோ மற்றும் போட்டாக்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோல் வேறு பெண்களை மாது பாலியல் சித்தரவதை செய்துள்ளானா? வேறு யாருடன் எல்லாம் அவனுக்கு தொடர்பு உள்ளது என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஒப்புக்கு வழக்கு போட்டு, பிறகு ஜாமினில் வெளிவிட்டால், இதுபோன்ற கொடூர சம்பவங்கள் தொடரும். எனவே, இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய வகையில் தீவிரமாக விசாரித்து, கடும் தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.
இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போலவே திருப்பூரிலும் வீடியோ எடுத்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்த விவகாரம், பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.







