--- --:--:-- --

கொரொனாவுக்கு மருந்தை சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப்படுவது ஏன்?

7

கொரொனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப்படுவது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

 

தமிழகத்தில் சித்த மருத்துவ ஆய்வுக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம், சித்தமருத்துவ ஆய்வுக்காக ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டு உள்ளது எனவும் உயர் நீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஜூலை 23-ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon