--- --:--:-- --

கடன் பிரச்னையால் மகளுக்கு தெரிவித்துவிட்டு தந்தையும், தாயும் தற்கொலை..!

8

திண்டுக்கல்லில் கடன் பிரச்சினையால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பொய்யபட்டி ஜோசப் காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான மோகன் ரெட்டியார் சத்திரத்தில் திருமணமாகி வசித்து வரும் மகள் தமிழ்ச்செல்வி நேற்று மதியம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடன் பிரச்சினையால் தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார்.

 

இதையடுத்து தமிழ்செல்வி விரைந்து வந்து பார்த்தபோது இரண்டு பேரும் வீட்டில் இறந்து கிடந்துள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்ததில் தற்கொலைக்கு முன்பு மோகன் எழுதிய கடிதம் சிக்கியது. தற்கொலைக்கு கடன் பிரச்சினையை காரணம் என மோகன் எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon