--- --:--:-- --

சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

7

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய வருமான சான்று மற்றும் சொத்து சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுக் சலுகைகையை பெற அந்தந்த தாசில்தார்களிடமிருந்து வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்த சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாம் என தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த ஜூன் 4ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.

 

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் அதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் எந்த காரணமும் குறிப்பிடாமல் சொத்து மற்றும் வருமான சான்றிதழ் வழங்க வேண்டாம் என பிறப்பிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மனு மீது நீதிபதிகள் சுப்பையா மற்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சான்றிதழ் வழங்குவது ஏன் நிறுத்திவைக்கப்பட்டது தொடர்பாக வரும் 30ஆம் தேதி பதில் தருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon