சாத்தான் குளம் தந்தை – மகன் இறப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு!
சாசாத்தான்குளத்தில் தந்தை, மகன் நீதிமன்ற காவலில் மரணமடைந்த விவகாரத்தில் இருவரையும் சிறைக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட் நடவடிக்கை குறித்து தாமாக முன் வந்து விசாரிக்க கோரும் முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் மரணம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் முறையீடு செய்தார்.
நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்த போது காவல்துறையினர் ஆஜர்படுத்திய போது மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக காவலில் வைக்க உத்தரவிட்டதால் இருவரும் இறந்திருக்கிறார்கள் என்பதால் நீதித் துறையின் பங்கு குறித்தும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக பதிவுத்துறைக்கு கடிதம் அளித்தால் நாளை வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.






