மின் கட்டணம் செலுத்த ஜூலை 15ஆம் தேதி வரை அவகாசம்!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது முடக்கம் அமலில் உள்ள பகுதிகளில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் ஜூலை 15 வரை தாமத கட்டணம் இன்றி மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களிலும் வரும் 30ஆம் தேதி வரை மின் கட்டண வசூல் மையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் 30 வரையிலான காலத்தில் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.






