--- --:--:-- --

அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு கபசூரவாத மூலிகை சூப் வழங்கிய கீழடி ஊராட்சி மன்ற தலைவர்

0.5

தமிழக தொல்லியல் துறை சார்பாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய ஆட்கொல்லி நோயான இந்த கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் கபசுரக் குடிநீர் அருந்துமாறு தமிழக அரசு மற்றும்  சுகாதாரத் துறையும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

 

அதன் அடிப்படையில்  இன்று கீழடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன. கீழடியின் ஊராட்சி மன்ற தலைவர் வேங்கட சுப்பிரமணியன் ஏற்பாட்டில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நோய் தொற்று பரவ விடாத அளவிற்கு அவர்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் ஜூங், வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

அதோடு மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்தியுடைய கபசூரவாத மூலிகை சூப் வழங்கப்பட்டது. அகழாய்வு பணியில் ஈடுபடுபவர்கள் அனைவரும் கைகளை கழுவிவிட்டு முகக் கவசங்கள் அணிந்து தான் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்த ஆறாம் கட்ட ஆய்வு பணிகள் நான்கு இடங்களில் நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon