வெளியூர்களில் இருந்து வருவோர் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் !!!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுண்டக்காமுத்தூர், வாய்க்கால்பாளையம் பகுதியில் மாநகராட்சி பொது்நிதியில் இருந்து ரூ.85.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்மா சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.அப்போது,பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக முயன்று வருவதாகவும் பேசினார்.

மேலும்,சென்னை,மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருவோர்கள் குறித்து மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்,தகவல் தெரிவித்தால் அவர்களை கொரோனாவில் இருந்து மீட்க முடியும் எனவும்,மக்கள் அரசுக்கு முழுமையாக ஒத்துழைத்து கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வெளியே வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத்,இணை ஆணையர் மதுராந்தகி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






