--- --:--:-- --

நேர்மையானபெண் தலையாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் – முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு !

நேர்மையானபெண் தலையாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் – முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு !

சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை அடுத்து வி.புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் என்பவர் தற்போதைய பெண் தலையாரியை தகாத வார்த்தைகளை கூறியும் கையை ஓங்கி உன்னை கொன்றுவிடுவேன் என்றும் லாரியில் ஏற்றி உன் குடும்பத்தையே நாசம் செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

 

மேலும் கிராம நிர்வாக உதவியாளரும், வருவாய் ஆய்வாளரும் தகாத வார்த்தைகளால் கூறி மிரட்டியிதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே மன அழுத்தத்தின் காரணமாக தலையாரி மீனாகுமாரி மயங்கி விழுந்தார் அங்கிருந்த மற்றும் இரு தலையாரிகள் சேர்ந்து அவரை பத்திரமாக சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தார்கள்.

மேலும் மனம் படபடத்த நிலையில் இருந்தவரை 108 ஆம்புலன்சை வரவழைத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதன் விளைவால் சக தலையாரிகள் பதற்றம் உற்று தாலுகா ஆபீசில் பீதியான நிலையில் அலைந்து திரிந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon