பிளஸ் டூ இறுதிநாள் தேர்வை தவறவிட்ட மாணவர்களிடம் விருப்பக் கடிதம் பெறப்படுகிறது!
பிளஸ் டூ இறுதிநாள் தேர்வை தவறவிட்ட மாணவர்களில் மறுதேர்வு எழுத விருப்பம் இருக்கும் மாணவர்களிடம் இருந்து விருப்ப கடிதம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 24ஆம் தேதி வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் தேர்வுகள் நடத்தப்பட்டன. கொரொனா அச்சத்தால் 32 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்று புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் அவர்களுக்கு ஜூன் 18-ஆம் தேதி மறு தேர்வு அறிவிக்கப்பட்டு தொற்று பரவல் அதிகரித்திருப்பதால் அந்தத் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்வை தவறவிட்ட மாணவர்களை தொடர்பு கொண்டு மீண்டும் தேர்வு எழுத விருப்ப கடிதம் பெற்றும் அதனை 26ம் தேதிக்குள் அரசு தேர்வுகள் இயக்ககத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






