வெப்பநிலை 4.4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு!
21ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 4.4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பருவநிலை மாறுபாடு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புனேவில் செயல்பட்டு வரும் இந்திய வெப்ப மண்டல வானிலை அறிவியல் நிறுவனத்தின் ஒரு பிரிவான பருவநிலை மாறுபாடு ஆய்வு மையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 1901 முதல் 2018 வரை 0.7 டிகிரி செல்சியஸ் உயர்ந்ததாகவும் இதற்கு பசுமைஇல வாயுக்கள் ஏற்படுத்திய விளைவு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் சராசரி வெப்பநிலையில் 4.4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் இறுதியில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் இடையிலான கோடைக்காலங்களில் வெப்பத்தின் தாக்கம் 3 முதல் 4 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.






