ஒரு நாள் முழுவதும் நெஞ்சில் கத்தியுடன் உயிருக்கு போராடிய பெண்!
நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் சுமார் 30 மணி நேரம் உயிருக்கு போராடிய பெண்ணை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த மல்லிகா என்பவரை கடந்த மே 25ஆம் தேதி ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
நெஞ்சு பகுதியில் 6 அங்குலம் அளவிற்கு கத்தி பாய்ந்த நிலையில் அது அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஓர் அங்குல கைப்பிடி மட்டுமே வெளியே தெரிந்த நிலையில் பரிசோதனை செய்து பார்த்ததில் கத்தி இறங்கிய பாதையில் முக்கிய உறுப்புகள் எதுவும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
சுமார் 30 மணி நேரம் நெஞ்சில் குத்திய கத்தியோடு இருந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் தலைமையிலான குழு பாதுகாப்பாக கத்தியை அகற்றியது. சிகிச்சை முடிந்த நிலையில் மல்லிகா நலமுடன் வீடு தற்போது வீடு திரும்பியுள்ளார்.






