அவிநாசி – அத்திக்கடவு திட்டப்பணிகளை சபாநாயகர் தனபால் இன்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் !!!
கோவை,திருப்பூர்,ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான அவினாசி – அத்திக்கடவு திட்டம் ரூ.1652 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது.இத்திட்டத்தின் கீழ் கோவை,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளம்,குட்டைகள் நீர் நிரப்பப்பட உள்ளது.
இதற்காக அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட குன்னத்தூராம்பாளையத்தில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட உள்ளது.இந்த நீரேற்றம் அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று குன்னத்தூராம்பாளையத்தில் நடைபெற்றது.தமிழக சட்டப்பேரவை சபாநாயகரும்,அவினாசி சட்டமன்ற உறுப்பினருமான தனபால் பூமி பூஜை செய்து,அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அன்னூர் ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிச்சாமி,கரியாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரும்,ஒன்றிய கழக துணைச்செயலாளருமான சாய்செந்தில்,மாவட்ட கவுன்சிலர் அமுல் கந்தசாமி,ஐ.டி பிரிவு கே.சி.பிரபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட அவினாசி – அத்திக்கடவு திட்ட செயற்பொறியாளர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






