--- --:--:-- --

மாநில முதல்வர்களுடன் காணொளி மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை..!

6

கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இன்றும், நாளையும் காணொளி மூலமாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இன்று 21 மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகளில் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்.

 

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகளில் முதல்வருடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசிக்க உள்ளார். கொரொனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேசுவது இது ஆறாவது முறை ஆகும். பொது முடக்கத்தில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கொரொனா தொற்றின் பரவல் நாடுகள் கடுமையாக அதிகரித்து வருகிறது.

 

இந்நிலையில் இந்த முறை நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon