--- --:--:-- --

ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகள் அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது!

7

கொரோனா பரவலைத் தடுக்க ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகள் அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இருந்து அதிக அளவிலான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள்.

 

இவர்கள் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்ல ராணிப்பேட்டை மாவட்டத்தை பயன்படுத்துகிறார்கள். இதனால் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 25 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

கிராமப்புற, நகர்ப்புற சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது கூடுதலாக இரண்டு துணை கண்காணிப்பாளர்கள் மாவட்ட எல்லை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தி உள்ளனர். ஒரு சோதனைச் சாவடிக்கு 20 காவலர்கள் விகிதம் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 5 காவலர்களை பணியில் அமர்த்தி சுழற்சி முறையில் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon