பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் இருவருக்கு கொரோனா.!
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள இரண்டு சிறைவாசிகளுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. பாளையங்கோட்டையில் இருந்து ஐந்து சிறைக்கைதிகளை கணினி பயிற்சிக்காக சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். இரு மாதத்திற்கு பிறகு பொது முடக்கத்தில் தளர்வு அளிக்கப்பட்டதை அடுத்து அவர்களை மீண்டும் பாளையங்கோட்டைக்கு சிறைக்கும் அழைத்துவரப்பட்டனர்.
மருத்துவ பரிசோதனையில் இருவருக்குமே கொரொனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.






