--- --:--:-- --

கடலில் விழுந்த சரக்கு கப்பலின் 40 கண்டெய்னர்கள்..!

13

சிங்கப்பூர் சரக்கு கப்பலில் இருந்த 40-க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆழ்கடல் பகுதியில் தவறி விழுந்துள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏ‌பி‌எல் இங்கிலாந்து என்ற பெயர் கொண்ட கப்பல் சீனாவின் நிங்க்போ இடத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு கண்டெய்னரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு சென்றது.

 

சிட்னி அருகே பயணித்த போது மோசமான வானிலை மற்றும் அலைகளின் கடும் சீற்றம் காரணமாக அந்த கப்பலில் இருந்து விழுந்த கண்டெய்னர்களில் பாகங்களை கடலில் கண்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை நிறுவனத்தை சேர்ந்த சரக்குக் கப்பல் ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டில் 37 கண்டெய்னர்களை கடலில் தொலைத்தது.

Leave a Reply

Right Menu Icon