வாடைகை வேண்டாம் எனக்கூறிய 20 வீட்டின் உரிமையாளர் ! மனிதநேய செயல்!
கொரோனா பொது முடக்கம் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு உள்ள நிலையில் வருமானமின்றி தவிப்போரின் நிலையை உணர்ந்து நாகையில் 20 வீடுகளுக்கான வாடகை தர வேண்டாம் என வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். பேரிடர் காலங்களில் தான் மனித நேயத்தின் முகம் வெளிப்படுகிறது. இந்த கொரொனா காலமும் அதற்கு விதிவிலக்கல்ல.
பொது முடக்கத்தால் வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் துயரப்படும் குடும்பங்களை கருத்தில் கொண்டு வாடகை வேண்டாம் என்று கூறியுள்ளார் நாகப்பட்டினம் யாகுசன் பள்ளி தெருவை சேர்ந்த ஷேக் அப்துல் காதர். நாகையில்ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வரும் இவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 20 குடும்பங்களுக்கும் இதை தெரிவித்துள்ளார்.
வாடகை இல்லாததால் பண இழப்பு இருந்தாலும் அவர்களுக்கு உதவும் மனத்திருப்தி பெரிதாக இருக்கிறது என்கிறார் ஷேக் அப்துல் காதர். கடன்களும் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளும் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்திற்கு எப்படிப்பட்ட சுமைகளை தரும் என்பதை இந்த காலம் உணர்த்தும் வேளையில் அந்த சுமையை தன்னால் இயன்ற அளவு குறைக்க இதுபோன்ற மனித நேயம் உடையவர்கள் வணக்கத்திற்குரியவர்களே.






