--- --:--:-- --

7 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகும்!

14

மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் திருத்தணியிலும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல், 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். இதன் காரணமாக அனல் காற்று வீசக்கூடும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

 

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

 

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாகும். இதனிடையே தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறை காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அடுத்த இரு நாட்களுக்கு மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம். தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, தென்மேற்கு அரபிக் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

 

இதனால் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என
தெரிவித்துள்ளது. மேலும் 31 ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon