பெண் ஊழியருக்கு முத்தம் கொடுத்த செயல் அலுவலர்!
வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் கோபிநாத் என்பவர் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.கடந்த நவம்பர் மாதம் கோபிநாத் பணியில் இருந்தபோது அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர் தனது பிறந்தநாளுக்காக இனிப்பு கொடுத்துள்ளார். அப்போது திடீரென இருக்கையிலிருந்து எழுந்த கோபிநாத் பெண் ஊழியருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
இந்த காட்சிகள் கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப்பில் வைரலானது. இதை எடுத்து விசாரணை நடத்திய பேரூராட்சி உதவி இயக்குனர் குருராஜ் கோபிநாத்தை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.






