--- --:--:-- --

கேரள அரசிடம் இருந்து உரிய இ – பாஸ் பெறாத யாரும் வாளையார் வழியாக கேரளா செல்ல முயற்சிக்க வேண்டாம் — கோவை மாவட்ட காவல் துறை வேண்டுகோள் !!!

10

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இதனால் நாடு முழுவதும் 3 வது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது.இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் மக்கள் அம்மாநில அரசிடம் இருந்து உரிய இ – பாஸ் இருந்தால் மட்டுமே அம்மாநில காவல் துறையினரால் அனுமதிக்கப்படுகின்றனர்.இல்லையென்றால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

 

இந்த நிலையில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் கேரளா செல்லும் மக்களுக்காக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அறிக்கையில் கோவை மாவட்டத்தில் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மாவட்ட மற்றும் மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளது.

அத்தியாவசியமான அவசர பயணங்கள் மேற்கொள்பவர்கள் உரிய ஈ-பாஸ் பெற்று பயணம் மேற்கொள்ளலாம் எனவும்,சமீப காலமாக கேரளா மாநிலம் செல்வோர் கோவை மாவட்டம் வாளையார் வழியாக செல்ல முயற்சி செய்து நீண்ட வரிசையில் காத்திருந்து கேரளா போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வாடிக்கையாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும்,கேரளா மாநிலம் செல்ல விரும்புகிறவர்கள் கேரளா மாநில அரசிடம் இருந்து உரிய இ – பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே கேரளா எல்லைக்குள் கேரளா போலீசார் அனுமதிக்கின்றனர் என்பதால் கேரளா மாநில அரசிடம் இருந்து உரிய இ – பாஸ் பெறாத யாரும் வாளையார் வழியாக கேரளா செல்ல முயற்சித்து இன்னல் பட வேண்டாம் என கோவை மாவட்ட காவல் துறை சார்பில் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon