கேரள மக்களை துரிதமாக விமானத்தில் அழைத்து வந்த பினராய் அரசு
கேரள மக்களை துரிதமாக விமானத்தில் அழைத்து வந்த பினராய் அரசு அமீரகத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த சுமார் 2 லட்சம் மக்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா பாதிப்பால் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்த 363 பயணிகளை முதல்கட்டமாக விமானம் மூலம் கொச்சி, கோழிக்கோட்டு இன்டர்நெஷனல் விமான நிலையத்திற்கு நேற்று இரவு 10.30 மணிக்கு அழைத்து வரப்பட்டனர்.
உடனே வந்தவர்கள் அனைவருக்கும் முறையான கொரோனா பரிசோதனை செய்து நோய் தொற்றில்லாதவர்களை அவரவர் வீடுகளுக்கே தனி வாகனங்களில் அனுப்பி வைத்துள்ளது. இதற்காக கேரளாவில் உள்ள அனைத்து ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டு வரிசையாக நிற்க வைத்து உடனுக்குடன் அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தனர் அதிகாரிகள்.
இந்தியாவிற்கு குறிப்பாக கேரளவுக்கு அந்நிய செலாவனியை கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்கும் வளைகுடா மக்களை இந்த பேரிடர் காலத்தில் கண்ணியமாகஅழைத்துவந்த பினராய் அரசை மக்கள் வாழ்த்தினர். நமது தமிழக எடப்பாடி அரசும் வளைகுடாக்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். செய்யுமா?







