--- --:--:-- --

காவல் ஆய்வாளர் கலையரசன் கண்காணிப்பின் கீழ் யாரும் பசியோடு இருப்பதில்லை

காவல் ஆய்வாளர் கலையரசன் கண்காணிப்பின் கீழ் யாரும் பசியோடு இருப்பதில்லை

ஊரடங்கு தொடங்கியதிலிருந்து காவல் ஆய்வாளர் எம்.கலயரசன் சென்னை குமரன் நகர் பகுதியில் உணவின்றி தவிக்கும் நபர்களுக்கு உணவு வழங்கும் வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட தொடங்கினார்.

 

ஆரம்பத்தில், அவர் ஒரு சில நடைபாதை குடியிருப்பாளர்களுக்கு உதவத் தொடங்கினார் பின்னர் சென்னை குமரன் நகர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் கலையரசன் ஒவ்வொரு நாளும் 325 உணவுப் பொட்டலங்களை வழங்கி வந்தார் மற்றும் கோயில்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று உணவு தேவைப்படும் உதவிகளை செய்து வந்தார்.

 

மேலும் ஏற்கனவே இப்குதியில் உள்ள மக்கள் இவரை நன்கு அறிந்தவர் என்று கூறப்படுகிறது.பலர் ஓரிரு நாட்களுக்கு ஏழைகளுக்கு உணவு வழங்க முயற்சிக்கையில், இந்த ஆய்வாளர் ஊரடங்கு முழு காலத்திற்கும் தனது முயற்சிகளை எந்தவொரு ஆதரவாளர்களிடமும் முயற்ச்சிக்கவில்லை தனது சொந்த செலவில் வழங்கி வந்துள்ளனர்.

 

இந்நிலையில் ஆய்வாளர் தனது குடும்ப வாட்ஸ்அப் குழுவில் உணவு மற்றும் தங்குமிடம் தேவைப்படும் நபர்களின் படங்களை வெளியிட்டுள்ளார் இதனையறிந்த பிலிப்பைன்ஸ் நாட்டில் வசிக்கும் இவரது உறவினர் ஒருவர் உதவி செய்ய முன்வந்துள்ளார்.அனைத்து பயனாளிகளும் ஒரு நாளைக்கு இரண்டு உணவு பொட்டலங்களைகளை வழங்குவதில் கலையரசன் உறுதி செய்கிறார்.

 

அவர் சில தன்னார்வலர்களின் ஒத்துழைப்போடு ஒரு வீட்டில் உணவு தயாரித்து வழங்கி வருவது இந்த குமரன் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இவர் ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon