துல்கர் சல்மானின் திரைப்படத்தில் பிரபாகரன் பெயர் சித்தரிப்புக்கு சீமான் கண்டனம்!
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரில் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயரை தவறாக பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த முந்தைய படமான காம்ரேட் எனும் அமெரிக்க திரைப்படத்தையும் பிரபாகரனின் புகைப்படம் ஒரு காட்சியில் பயன்படுத்தப் பட்டிருப்பதால் அவருக்கு பிரபாகரன் பற்றி கட்டாயம் தெரிந்திருக்க கூடும் என்று கூறியுள்ள சீமான் தெரியாமல் வைத்துவிட்டோம் என்றோ கேரளாவில் பெரும்பாலானோர் வைத்திருக்கும் பொதுப்பெயர் என்றோ துல்கர் சல்மானின் காரணங்கள் ஏற்புடையது அல்ல எனக் கூறியுள்ளார்.

படக்குழுவினருக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றால் அந்த பெயர் இடம்பெறும் காட்சியை மட்டும் தனியாக விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் எனக் கேள்வி எழுப்பியிருக்கும் சீமான் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பிரபாகரன் பெயர் பயன்படுத்தப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என தெரிவித்துள்ள துல்கர் சல்மான் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்.






