--- --:--:-- --

ஊரடங்கால் வெளியான கள்ளக்காதல் விவகாரம்! மனைவியின் கள்ளக்காதலன் கொலை!

11

மனைவியின் கள்ளக்காதல் ஊரடங்கால் தெரியவந்ததையடுத்து மனைவியின் கள்ளக்காதலனை கட்டையால் தலையில் அடித்தே கொன்றுள்ளார் கணவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த கொலையின் பின்னணி என்ன?

 

30 வயதான சுந்தரமூர்த்தி தற்போது உயிரோடு இல்லை. தனது முன்னாள் காதலியை கைவிட மனமில்லாததால் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து காதல் ஊரடங்கு தெரியவர கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பருத்தி கொள்ளை கிராமத்தை சேர்ந்த 30 வயதான விவசாயி பிரேம்குமார்.

 

இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 28 வயது திவ்யாவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. திருமணத்திற்கு முன்பே திவ்யாவிற்கு உத்திரமேரூர் பேரூராட்சியில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்த சுந்தரமூர்த்தி என்பவருக்கும் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து திவ்யாவின் தாய் தனது அண்ணன் மகனுக்கு மகளை திருமணம் செய்து வைத்துள்ளார்.

 

இதற்கிடையே சுந்தரமூர்த்திக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் வேறு வேறு திருமணம் நடைபெற்றாலும் திவ்யாவிற்கு சுந்தரமூர்த்திக்குமான காதல் தொடர்ந்துள்ளது. இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியூர் சுற்றியுள்ளனர். மேலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சந்தித்துக் கொண்டே தங்கள் பழைய காதலை வளர்த்துள்ளனர்.

 

ஊரடங்கு காரணமாக இவர்கள் சந்தித்து கொள்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது. திவ்யாவின் வீட்டு வாசலுக்கு சுந்தரமூர்த்தி வருவதும் அந்த நேரம் பார்த்து திவ்யா சரியாக வாசலுக்கு வருவதும் கடந்த ஒரு வாரமாக நடந்து உள்ளது. இந்த விவகாரம் திவ்யாவின் கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் அரசல்புரசலாக திவ்யா சுந்தரமூர்த்தியின் விவரமும் தெரியவந்துள்ளது.

 

இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை காலை திவ்யாவின் அண்ணன் தினேஷ் கணவரும் வீட்டு வாசலில் நின்று பேசி வந்துள்ளனர். அந்த நேரம் பார்த்து சுந்தரமூர்த்தி திவ்யாவின் வீட்டு வாசல் அருகே வந்துள்ளார். இதை பார்த்த திவ்யாவின் அண்ணனும் கணவரும் சேர்ந்து ஏன் இங்கு அடிக்கடி சுற்றித் திரிகிறாய் என சுந்தரமூர்த்தியை கேட்டுள்ளனர்.

 

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் சண்டையாக மாறி அருகிலிருந்த கட்டையால் சுந்தரமூர்த்தி தினேஷும் ஜெயக்குமாரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சுந்தரமூர்த்தி மயங்கி விழுந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள உத்தரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சுந்தரமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த உத்திரமேரூர் போலீசார் திவ்யாவின் கணவர் ஜெயக்குமார் மற்றும் அவரது அண்ணன் தினேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon