கொரொனா பரிசோதனையில் ரெம்டெசிவிர் மருந்து பலனளிக்கவில்லையா?
கொரொனாவை குணப்படுத்த உதவும் என்று கருதப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து மனிதர்களுக்கு கொடுத்து நடத்தப்பட்ட சோதனையில் தோல்வி கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியானது.
அதில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 237 பெயரில் 158 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டதாகவும் ஆனால் இதில் 18 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதால் இதை தயாரித்த நிறுவனம் சோதனையை நிறுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த பதிவு பின்னர் உலக சுகாதார நிறுவன வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
தவறுதலாக வெளியாகி விட்டதாகவும் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் குறைவான நபர்கள் இந்த மருந்தைக் கொண்டு சோதிக்கப்பட்ட தாகவும் எதிர்பார்த்த பலன் இல்லாததால் சோதனைகள் நிறுத்தப்பட்டதாகவும் இதை தயாரித்த நிறுவனம் கூறியுள்ளது. எனினும் ரெம்டெசிவிர்க்கு கொரொனாவை குணப்படுத்தும் வல்லமை இருப்பதாகவே இன்னும் கருதுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரொனா வைரஸின் பரவலை தடுக்க ஊரடங்கு தீர்வாகாது என்று காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.







