வாடகை கேட்டு துன்புறுத்திய வீட்டு உரிமையாளர் கைது!
கேரளாவில் வாடகை கேட்டு கூலித் தொழிலாளியை துன்புறுத்திய வீட்டு உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள முத்தலை கோட்டா பகுதியை சேர்ந்த இவர் மேத்யூ. தாமஸ் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு சொந்தமான இடத்தில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வாடகை கொடுத்து வந்த நிலையில் பொது முடக்க உத்தரவால் மேத்யூவுக்கு வேலை இல்லாமல் வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் தாமஸ் வீட்டின் மின் இணைப்பையும், குடிநீர் இணைப்பையும் துண்டித்து விட்டார். மேலும் வழியை துண்டித்து விட்டு, வீட்டையும் காலி செய்ய கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவலர்கள் வீட்டு உரிமையாளர் தாமஸை கைது செய்தனர்.
ஊரடங்கால் சுற்றுச்சூழல் மாசு குறைந்து வானம் தெளிந்திருக்கும் நிலையில் காஷ்மீரில் இருக்கும் பீர் பாஞ்சால் மலைத்தொடர்கள் தெளிவாகத் தென்படுகின்றன. ஸ்ரீநகரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் இமயமலைப் பகுதியில் அமைந்திருக்கும் பீர் பாஞ்சால் மலைத் தொடர்களை தெளிவாக காண முடியாது. வாகன புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகை, காற்று மாசு ஆகியவற்றால் தூசு மண்டலங்கள் மலைத் தொடர்களை மனிதர்களின் பார்வையில் இருந்து மறைத்து வைத்திருந்தனர்.
தற்போது ஊரடங்கால் ஒட்டுமொத்த உலகிலும் சுற்றுச்சூழல் மாசு வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் வட மாநிலங்களில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்று மாசு குறைந்திருப்பதாக அமெரிக்காவின் நாசா செயற்கைக்கோள் புகைப்படத்தில் சுட்டிக்காட்டியிருந்தது. இதனால் ஸ்ரீநகரில் இருந்து பீர்பாஞ்சால் மலைத்தொடர் தற்போது வெறும் கண்களால் பார்க்க முடியும் அளவிற்கு தெளிவாக தெரிகிறது.







