மூன்றாம் உலகப் போரை கொரோனா மூலம் தொடுக்கிறதா சீனா!
சீனா மூன்றாம் உலகப் போரை தொடுத்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டே சீனா கொரொனாவை பரப்பியதாக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் சீனாவின் திட்டம் குறித்த சர்ச்சை வலுத்துள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அணு ஆயுதம், வேறு எந்த ஆயுதமும் இல்லாமல் கிருமி மூலமாக சீனா மூன்றாம் உலக யுத்தத்தைத் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இராணுவ ரீதியாக பலம் வாய்ந்த அமெரிக்காவில் இந்த நோயால் 50 ஆயிரம் பேர் உயிரைப் பறி கொடுத்து விட்டது. மேலும் பல லட்சம் பேர் உலகம் முழுவதும் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தை சீர் குலைத்து மண்டியிட வைப்பதுடன் அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வல்லரசாக தன்னை வளர்த்துக்கொள்ள சீனா வைரஸை பரப்பி இருப்பதாக கிரகம் என்ற அரசியல் ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் முகாம் பகுதியில் காவல் துறையை சேர்ந்த ஒருவரை தீவிரவாதிகள் அவருடைய வீட்டில் புகுந்து துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இதை அறிந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தீவிரவாதிகளை விரட்டி சென்று சென்று அந்த காவலரை பத்திரமாக மீட்டனர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் டோடா மாவட்ட வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் குவியல் குவியலாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.







