மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டால் 7ஆண்டு சிறை
மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மருத்துவ பணியாளர் களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக தொற்றுநோய் சட்டம் 1897 திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் அவசர சட்டம் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
புதிய சட்டத்தின்படி தாக்குதலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மூன்று மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறையும் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறிய அவர் கடுமையான பாதிப்பு என்றால் குற்றவாளிக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறையும் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றார்.
அதேபோல் மருத்துவ பணியாளர்களின் சொத்துகளை சேதப்படுத்தினால் அதன் சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கு தொகை குற்றவாளியிடம் இருந்து இழப்பீடாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.






