“வைரசை மனிதனால் உருவாக்க முடியாது”
கொரொனா பாதித்த கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 33 பேர் என 48 பேர் கொரொனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மருத்துவர்கள் ஆகியோர் கைகளை தட்டி பல வகைகளை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
வைரஸை மனிதனால் உருவாக்க முடியாது என சீனாவின் சேர்ந்த ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரொனா உகான் நகரிலுள்ள வைராலஜி இன்ஸ்டியூட்டில் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் உலா வந்தன.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சம்பந்தப்பட்ட ஆய்வுக்கூடத்தில் இயக்குனர் செயற்கையானது என நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடையாது எனவும் ஆதாரம் இல்லாமல் சிலர் மக்களை தவறாக வழி நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையில் ஆனதே இந்த கருத்து என தெரிவித்த அவர் தற்போது மனிதர்களிடம் உள்ளது என தாங்கள் நம்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.







