தமிழகத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு..! உயிரிழப்பும் 17 ஆக உயர்வு!!
தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்தள்ளது.கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு இல்லாத நிலையில் இன்று 2 பேர் பலியான நிலையில், உயிரிழப்பும் 17 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
இன்று கொரோணா பாதிக்கப்பட்ட 43 பேரில் சென்னையில் மட்டும் 18 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் இன்று முதன் முறையாக ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 411-ல் இருந்து 457 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில், கொரோனா பாதிப்பில் இருந்து 46 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் கூறுகையில், கொரோனா தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் உடலை புதைப்பதாலோ எரிப்பதாலோ வைரஸ் பரவாது. எனவே பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், மயானங்களில் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை கைவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில்
உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. எனவேதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலிவான அரசியல் செய்வதை கைவிட வேண்டும்.
இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல என்பதை மு.க.ஸ்டாலின் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர்
விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.







