கேரளாவில் வாகனத்தை பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர்!
கேரளாவில் காவல்துறை வாகனத்தை பறிமுதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சின்னக்கானல் என்ற இடத்தில் வசிக்கும் விஜயகுமார் என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஊரடங்கு உத்தரவையும் மீறி மூணாறு அருகே சூரியநெல்லியில் சுற்றித்திரிந்து உள்ளார். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வாகனத்தை பறிமுதல் செய்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த அவர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு எடுக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாராவியில் கொரொனாவைரஸை கட்டுப்படுத்த மும்பை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து போராடி வருகிறது. மும்பை மாநகரில் மட்டும் கொரொனா வைரசால் 2,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரொனா சிகிச்சை பலனின்றி 112 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த நோயாளிகளில் 15 விழுக்காட்டினர் மும்பையில் மட்டும் உள்ளனர்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி என்று அழைக்கப்படும் தாராவியில் 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இடத்திற்குள் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். குறுகிய தெருக்கள் நெருக்கமான குடியிருப்புகள் மக்கள் நெரிசல் மிகுந்த கடை வீதிகளை கொண்ட தாராவியில் கொரொனா பரவலை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கூட்டமாக நடமாடும் மக்களில் யாராவது ஒருவருக்கு கொரொனா இருந்தால் அது ஏராளமானோருக்கு பரவும் அபாயம் உள்ளது.







