--- --:--:-- --

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி!

11

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பீர்க்கன்காரணை பகுதியை சேர்ந்த ராஜாங்கம் என்பவரும் அவரது இரண்டு மகன்களும் காற்று வாங்குவதற்காக வீட்டின் முன்பு கட்டிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

அப்போது அவரது வீட்டின் எதிரே சிதிலமடைந்த நிலையில் இருந்த சுற்றுச்சுவர் ஒன்று உறுதி தன்மையை இழந்து திடீரென சரிந்து விழுந்துள்ளது. சுவர் இடிந்து அவர்கள் அமர்ந்திருந்த கட்டிலின் மேல் விழுந்ததில் 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon