--- --:--:-- --

5 ஆயிரம் குடும்பங்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்போடு 14 லட்ச ரூபாய் மதிப்பில் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் !!!

1

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏழை,எளிய மக்கள் வேலை வாய்ப்பை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில. கொண்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அரசு விலையில்லா உணவுப்பொருட்கள் வழங்கி வருகிறது.

 

மேலும், தன்னார்வலர்கள் சார்பிலும் ஏழை,எளிய மக்களுக்கு உணவு, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஏழை,எளிய மக்களுக்கு ஊராட்சிமன்ற தலைவர் கார்த்திகேஸ்வரி சுந்தர்ராஜ் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்போடு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய கொருட்களை வழங்கினார். இந்த ஊராட்சிக்குட்பட்ட எட்டு கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் ஏழை,எளிய குடும்பங்களுக்கு 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.

 

இதில் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் சுந்தர்ராஜ் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon