கொரோனா ஊரடங்கால் வீட்டின் மொட்டைமாடியில் நடைபெற்ற திருமணம்!
குஜராத்தில் ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட திருமணம் ஒன்று ஊரடங்கு காரணமாக வீட்டின் மொட்டைமாடியில் எளிமையாக நடைபெற்றது. பினாமியா மற்றும் பூஜா ஆகியோரின் திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரொனா பரவலால் பொது இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு சூரத் நகரில் உள்ள மணமகள் வீட்டின் மாடியில் திருமணம் மிக எளிமையாக நடந்தது.
திருமணத்தில் மணமக்கள் இருவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். திருமண விழாவில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் பாதுகாப்பு பணியில் உள்ள பெண் காவலர் ஒருவர் ஓய்வு நேரத்தில் முக கவசம் தயாரித்து அவற்றை இலவசமாக வழங்கி வருகிறார்.
அவர் தனது பணி முடிந்து வீடு திரும்பியதும் தையல் இயந்திரத்தில் முகக் கவசங்கள் தயாரிக்கிறார். இதுவரை நூற்றுக்கும் அதிகமான முகக் கவசங்கள் தயாரித்திருக்கும் அமரேஷ்வரி 5 ஆயிரமாக கவசங்களை தயாரிக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார். ஆளுநருக்கான காவல் பணி மக்களுக்கான சேவை பணியையும் ஆற்றி வரும் இந்த பெண் காவலரின் சேவையை உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.







