--- --:--:-- --

வாட்ஸ் அப்பில் வரப்போகும் இந்த புதிய வசதி !

2

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வாட்ஸ் அப் செயலியில் ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மேல் வீடியோ கால் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகம் முழுவதும் பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பலர் வீடுகளில் இருந்தே பணியாற்றி வருகின்றனர்.

 

அலுவலக கூட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக பல செயலிகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் ஜும் செயலி பாதுகாப்பானது இல்லை என இந்திய அரசு அறிவித்தது. இந்தநிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மேல் வீடியோகால் மூலம் பேசும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ் அப் செயலியில் ஒரே நேரத்தில் 4 பேர் மட்டுமே வீடியோகால் மூலம் பேசும் வசதி உள்ளது.

Leave a Reply

Right Menu Icon