--- --:--:-- --

திரைப்படத் தொழிலாளர்களுக்கு 20 லட்சத்தை அள்ளி வழங்கிய லேடி சூப்பர் ஸ்டார்!

8

கொரொனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திரைப்படத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் நடிகை நயன்தாரா 20 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்கள்.

 

பாதிக்கப்பட்டுள்ள திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் கொடுத்த நிலையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் சூர்யா கார்த்தி குடும்பத்தினர், விஜய் சேதுபதி ஆகியோர் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் நடிகை நயன்தாரா 20 லட்சம் ரூபாயை திரைப்பட தொழிலாளர்களுக்கு கொடுத்து அதிக நிதி உதவி அளித்தவர்களின் பட்டியலில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார்.

 

அதேநேரத்தில் மக்களுக்கு உதவும் வகையில் பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு தமிழ் திரையுலகில் நடிகர் சிவகார்த்திகேயன் மட்டுமே 25 லட்சம் ரூபாய் நிதி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon