--- --:--:-- --

அரசு அறிவித்த 1000 ரூபாய் உதவித்தொகை இன்று முதல் வழங்கப்படும்

3

குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இன்று வழங்கப்படுகிறது. கொரொனாவால் பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் நிவாரண நிதியாக ரேஷன் அட்டைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் பணமும், ரேஷன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

 

இந்த நிவாரண தொகை தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. ஆயிரம் ரூபாயை பெறுவதற்கு பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்த டோக்கன்கள் வீடு வீடாக சென்று வழங்கப்படும் என்பதால் மக்கள் ரேஷன் கடைகளில் கூட்டமாக கூட வேண்டாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon