ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு…! அதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் ஏப்ரல் 15ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். கொரொனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
இந்த தடையானது ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆம் தேதியோடு 144 தடை உத்தரவு தமிழகம் முழுவதும் நிறைவு பெற உள்ள நிலையில் சென்னையில் மட்டும் ஏப்ரல் 15ஆம் தேதி காலை 6 மணிவரை தடையை நீட்டித்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






