முதியோர் உதவித்தொகை நேரில் சென்று வழங்கப்படும்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வரும் 11 முதல் 15 ஆம் தேதிக்குள் முதியோர் உதவித்தொகை நேரில் சென்று வழங்கப்படும் என வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

சென்னை எழிலகத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அறிவுரை வழங்கினர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார் தமிழகத்தில் 99 சதவீத மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளது என்றும் இனி வரும் காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் கேட்டுக்கொண்டார்.


Leave a Reply