வேலைக்கு செல்லும் தந்தையை போக வேண்டாம் எனக்கூறி கதறும் குழந்தை!
மகாராஷ்டிராவில் பணிக்கு செல்லும் காவலர் ஒருவரை அவரது குழந்தை வெளியே செல்ல வேண்டாம் எனக் கூறும் உருக்கமான வீடியோவை அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவை பகிர்ந்து ஆபத்தை அறிந்தும் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். காவல்துறையினர் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.






