கொசுக்களால் கொரோனா வைரஸ் பரவுமா ? பதில் என்ன?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொசுக்கள் மூலம் கொரொனா வைரஸ் பரவாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொசுக்கள் மூலம் டெங்கு போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்கள் பரவிய பாதிப்புக்குள்ளான மக்கள் கொசு மூலம் பரவும் என்று அச்சமடைந்து தங்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

 

இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை கொசுக்களால் கொரொனா ஏற்படாது என்று உறுதி அளித்துள்ளது. பாதிப்படைந்த மனிதர்களால் மட்டுமே அது மற்ற மனிதர்களுக்கு பரவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அனைவரும் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்றும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டும் பிறருக்கு அது பரவாமல் தடுப்பதற்காக முக கவசம் அணியலாம் என்றும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 

கொரொனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள் மற்றும் பணிவிடை செய்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply