--- --:--:-- --

மாதம் ஒருமுறை ஊரடங்கை அமல்படுத்தினால் காற்று மாசு குறையும்

8

மாதம் ஒருமுறை ஊரடங்கு அமல்படுத்தினால் காற்று மாசு குறையும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை வளாகத்திலுள்ள டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்த நடிகர் பார்த்திபன் அவரின் பணிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

 

இந்த சந்திப்பின்போது பூங்கொத்து கொடுப்பதற்கு பதிலாக ஐந்து லிட்டர் கிருமி நாசினி மருந்து வழங்கியதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.

 

இந்த கொடூர தொற்று பரவாமல் இருக்க மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறியவர், கொரொனா ஊரடங்கால் சுகாதார சூழல் நிலவுவதாகவும் இதுபோன்று மாதமொருமுறை அமல்படுத்தினால் காற்று மாசு குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon